நாட்டின் பொதுத்துறைப் பணியாளர்களுக்கான உத்தேச சம்பள அதிகரிப்பு மற்றும் முரண்பாடுகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்தவகையில், அடுத்த வருட வரவுசெலவுத் திட்டத்தில் அதற்குத் தேவையான 185 பில்லியன் ரூபாவை திறைசேரி ஒதுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில் உள்ளடக்கப்படும் ஒதுக்கீடுகளுக்கான ஏற்பாடுகளை திறைசேரி (Ministry of Finance) மேற்கொண்டு வருகிறது.
முன்மொழியப்பட்ட அதிகரிப்பானது, ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பட்ட 10 ஆயிரம் ரூபாய்க்கு சமனானதாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வருவாய் இலக்குகளை அடைவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு, இந்த உத்தேச அதிகரிப்புகளை வழங்க முடியும் என்று திறைசேரி தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், தேர்தலை கருத்திற்கொண்டு, இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறவிருந்த சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான மீளாய்வு, அடுத்த தவணைக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க (Shehan Semasinghe) தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை அடுத்த வருடம் 55,000 ரூபாவாக அதிகரிக்க உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) உறுதியளித்துள்ளார்.
அனுராதபுரம் (Anuradhapura) சல்காது மைதானத்தில் நேற்று (17) இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Comments are closed.