கடன் வழங்குனர்கள் குறித்து ஜனாதிபதி வழங்கியுள்ள தகவல்

11

18 கடன் வழங்குனர் நாடுகள் 10 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் சலுகையை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கான தனது பிரசாரத்தை ஆரம்பித்துள்ள நிலையில் இன்று (18.08.2024) அவர் இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், “குறித்த 18 நாடுகளும் உரிய வட்டியில் சலுகைகளை வழங்கியுள்ளன.

இந்தநிலையில் சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையை தொடர்ந்தும் வைத்திருக்க வேண்டும்.

அத்துடன் கடன் வழங்குபவர்களுடனான ஒப்பந்தத்தையும் அப்படியே வைத்திருக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

Comments are closed.