குறைந்த கட்டணத்தில் ஆரம்பமாகவுள்ள சிங்கப்பூர் கொழும்பு விமான சேவை

14

சிங்கப்பூரில்(Singapore) இருந்து கொழும்புக்கு(Colombo) குறைந்த கட்டண விமான சேவையை வழங்கவுள்ளதாக ஜெட்ஸ்டார் ஏசியா நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த விமானம் சேவை எதிர்வரும் நவம்பர் மாதம் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக நேற்று(14) அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஒவ்வொரு வாரமும் ஜெட்ஸ்டார் ஏசியா தமது ஏர்பஸ் யு320 விமானங்களைப் பயன்படுத்தி ஐந்து இருவழிச் சேவைகளை மேற்கொள்ளவுள்ளது.

அத்துடன், இரண்டு இடங்களுக்கும் இடையிலான பயணத்துக்காக 90,000 ரூபாய்க்கும் குறைந்த கட்டணம் அறவிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம், ஜெட்ஸ்டார் ஏசியா சிங்கப்பூரிலிருந்து கொழும்புக்கு ஒரு வழி கட்டணமாக 149 டொலர்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும், கிளப் ஜெட்ஸ்டார் உறுப்பினர்களுக்கு 139 டொலர்களுக்கும் குறைவான கட்டணங்கள் அறிவிடப்படவுள்ளன.

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் தலைவர் சாலக கஜபாஹு கூறுகையில், சிங்கப்பூருக்கும் இலங்கைக்கும் இடையிலான ஜெட்ஸ்டார் ஆசியாவின் நேரடி விமானங்கள் சுற்றுலாத் துறையின் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.

Comments are closed.