நாடாளுமன்றம் கலைக்கப்படும் திகதி: விஜித ஹேரத் தகவல்

33

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும் என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் (Wijitha Herath) இந்த விடயத்தை கூறியுள்ளார்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க வெற்றியீட்டுவார் எனவும் அதன் பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தற்போதைய நாடாளுமன்றம் ஊழல் மோசடியாளர்கள் மற்றும் குற்றவாளிகளினால் நிரம்பியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், புதிய நாடாளுமன்றத்தை நியமிக்க மக்களுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

Comments are closed.