ஒரு மாதத்தின் பின்னர் கணவரின் மரணத்தை அறிந்து கொண்ட கிளப் வசந்தவின் மனைவி! உடல் நிலை தொடர்பில் வெளியான தகவல்

18

அத்துருகிரிய பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட கிளப் வசந்தவின் மனைவி மெனிக் விஜேவர்தன வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் 08ஆம் திகதி அத்துருகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது பிரபல வர்த்தகரான கிளப் வசந்த உள்ளிட்ட இருவர் உயிரிழந்ததுடன், கிளப் வசந்தவின் மனைவி மெனிக் விஜேவர்தன உள்ளிட்ட சிலர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்தனர்.

இந்த நிலையைில், தீவிர சிகிச்சைப பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த மெனிக் விஜேவர்தன தற்போது நலமாக இருப்பதாக கூறப்படுகின்றது.

மேலும், கிளப் வசந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த விடயம் நேற்றையதினம் தான் அவருடைய மனைவி மெனிக் விஜேவர்தனவுக்கு தெரியவந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது. இதனால் அவர் கடும் மன வேதனையிலும், மன உளைச்சலிலும் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதுருகிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள பச்சை குத்தும் நிலையமொன்றை திறப்பதற்கு சென்றிருந்த போது கிளப் வசந்தவை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் அவருடன் சேர்த்து மற்றுமொரு நபரும் உயிரிழந்தார்.

மேலும், கிளப் வசந்தவின் மனைவியும், பிரபல பாடகி கே.சுஜீவா உள்ளிட்ட நால்வர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், களுபோவில வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் கிளப் வசந்தவின் மனைவி அனுமதிக்கப்பட்டு மூன்று சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அங்கு, அவரது மார்பில் இருந்த தோட்டாக்களை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றியுள்ளதாக தெரியவருகின்றது.

Comments are closed.