ரணிலின் வெற்றிக்காக நாடு முழுவதும் 150 அரசியல் கூட்டங்கள்

12

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் அரசியல் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.

அதற்கமைய, ஏறக்குறைய 150 அரசியல் கூட்டங்களை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவற்றில் 100 முக்கிய கூட்டங்களாக இருக்கும் என தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. மீதமுள்ளவை ஆதரவு குழுக்களால் நடத்தப்படும் எனவும் தெரியவந்துள்ளது.

இந்தக் கூட்டங்களுக்கு ஹரீன் பெர்னாண்டோ, மஹிந்தானந்த அளுத்கமகே, பிரசன்ன ரணதுங்க, வஜிர அபேவர்தன, ரமேஷ் பத்திரன, மனுஷ நாணயக்கார மற்றும் பலர் பிரதான பேச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Comments are closed.