இலங்கையில் அதிகரித்துள்ள வறுமைக்கோடு : வெளியானது அறிக்கை

12

இலங்கையின் (Sri Lanka) உத்தியோகபூர்வ வறுமைக் கோடு, கடந்த ஒரு தசாப்த காலப்பகுதிக்குள் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அண்மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2012 மற்றும் 2013ல் 5,223 ரூபாயாக இருந்த வறுமைக் கோடு, இந்த ஆண்டு ஜனவரிக்குள் 17,014 ரூபாயாக உயர்ந்துள்ளது.

2013ல் பதிவு செய்யப்பட்ட 5,223 ரூபாயாக இருந்த வறுமைக் கோடு 2016ல் 6,117 ரூபாயாக மாத்திரமே அதிகரித்துள்ளது.

இருப்பினும், 2022 இல் பொருளாதார நெருக்கடி பொருளாதார மற்றும் சமூக அழிவை ஏற்படுத்திய நிலையில், பணவீக்கம் உயர்ந்து வறுமைக் கோட்டிற்கு இரு மடங்கு அதிகரிப்புக்குத் தள்ளியது, அதாவது 15,970 ரூபாயை எட்டியதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் கொழும்பு மிக உயர்ந்த வறுமைக் கோட்டைப் பதிவு செய்தது, 2024 மே மாதத்தில் 17608 ரூபாயுடன் தரவரிசையில் உள்ளது, எனினும் அது ஜனவரியில் 18350 ரூபாயாக இருந்துள்ளது.

மாவட்ட வாரியான வறுமைக் கோட்டுடன் ஒப்பிடுகையில் கொழும்பு மாவட்டம் முதலிடத்தைப் பெற்றுள்ளது,

இந்த ஆண்டு மே மாதத்தில் 17,608 ரூபாயாக வறுமைக் கோடு பதிவாகியுள்ளது, ஜனவரியில் அது 18,350 ரூபாயாக இருந்தது

Comments are closed.