வாகன இறக்குமதி குறித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள மகிழ்ச்சி தகவல்

11

அடுத்த வருடம் முதல் வாகன இறக்குமதிக்கு படிப்படியாக அனுமதி வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த முடிவு சுங்க வரி மூலம் அரசாங்க வருவாயை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு, நாட்டின் வெளிநாட்டு கையிருப்புகளை ஆதரிப்பதற்காக வருமானம் அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், வாகனங்கள் மீதான சுங்க வரிகள் அரசாங்கத்திற்கு குறிப்பிடத்தக்க வருவாய் ஆதாரமாக இருப்பதால் வாகன இறக்குமதியை அனுமதிக்கும் அளவுக்கு நமது கையிருப்பு வளர்ந்துள்ளதாக நான் நம்புகிறேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.