வெளியாகியது 2023ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள்

17

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த பெறுபேறுகளை https://www.doenets.lk/examresults என்ற இணையத்தளத்தில் பார்வையிடலாம்.

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர் தரப் பரீட்சை கடந்த ஜனவரி மாதம் 4 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை நடைபெற்றது. பரீட்சையில் 3,42,883 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.

பின்னர் செயன்முறை பரீட்சைகள் நடத்தப்பட்ட நிலையில் சாதாரண தரப் பரீட்சை ஆரம்பிப்பதற்கு முன்னர் உயர்தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், சாதாரண தரப் பரீட்சையும் நடந்து முடிந்துள்ள நிலையில் க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.