விக்னேஸ்வரனுக்கு நன்றி தெரிவித்த பாலித ரங்கே பண்டார

17

நாட்டின் பொருளாதாரத்தின் ஸ்திர நிலை கருதி பிரதான இரண்டு தேர்தல்களையும் இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைக்கும் எனது யோசனைக்கு ஆதரவாகக் கருத்து வெளியிட்டுள்ள அரசியல்வாதிகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என்று இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார(Palitha Range Bandara) தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
எனது யோசனையை ஒரு தரப்பு எதிர்த்தாலும் இன்னொரு தரப்பு ஆதரவாகக் கருத்து வெளியிட்டு வருகின்றது.

விக்னேஸ்வரன் எம்.பி.(C. V. Vigneswaran) உள்ளிட்ட சிரேஷ்ட அரசியல்வாதிகள் எனது கருத்தை வரவேற்றுள்ளனர். அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

Comments are closed.