பிரமாண்டமாக உருவான தங்கலான்.. இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா?

17


இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள படம் தங்கலான். இந்த படத்தில் விக்ரம், பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், பசுபதி, இளம் நடிகர் அர்ஜுன் போன்ற பல நடிகர்கள் நடித்திருக்கின்றனர். இந்த படத்துக்கு ஜி. வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

தங்கலான் படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில், இந்த படம் குறித்து தயாரிப்பாளர் ஞானவேல், நடிகர் விக்ரம், நடிகை பார்வதி, மற்றும் மாளவிகா என பலர் அந்த படத்தில் நடித்த அனுபவத்தை குறித்து சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளனர்.

அதில், குறிப்பாக மாளவிகா மோகன் ஒரு பேட்டியில், படப்பிடிப்பு தளத்திற்கு ஒருநாள் மிகப்பெரிய எருமை கொண்டு வரப்பட்டது. அந்த எருமையை நான் பார்த்து கொண்டு இருப்பதை பார்த்த இயக்குனர் பா. ரஞ்சித். உனக்கு அந்த எருமை பிடித்திருக்கின்றதா என்று கேட்டார்.

அதற்கு நான் சாதரணமாக ஆமா என்றேன். உடனே அவர் என்னை அந்த எருமையின் மேலே ஏறி உக்காரச் சொன்னார். பின்பு, அந்த எருமையின் மீது அமரவைத்து தான் அந்த படப்பிடிப்பை நடத்தினர் என்று கூறிருந்தார்.

இந்தநிலையில் படத்தின் முதல் பாடலான மேனா மினுக்கி மற்றும் டீசர் வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து, இந்த படத்தின் இரண்டாவது பாடல் இன்று அதாவது ஆகஸ்ட் 2ல் வெளியாக உள்ளது எனவும், படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 5ம் தேதி வெளிவர உள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed.