மோசமான நிலையில் கேரளாவின் வயநாடு மக்கள்.. பண உதவி செய்த நயன்தாரா, விக்னேஷ் சிவன்

23

இயற்கை கொண்டாட எந்த அளவிற்கு அழகாக உள்ளதோ அதே அளவிற்கு கொஞ்சம் அசைந்தால் என்ன ஆகும் என்பது இப்போது வயநாட்டில் நடந்த சம்பவம் மூலம் நன்றாக தெரிகிறது.

இதற்கு முன்பும் இயற்கையின் கோர முகத்தை பார்த்துள்ளோம், இந்த முறை படு மோசமாக உள்ளது. வயநாட்டில் இருந்து அடுத்தடுத்து வரும் செய்திகள் அனைவரையும் பதற வைக்கிறது.

தொழிலதிபர்கள், பிரபலங்கள், சாதாரண மக்கள் என அனைவருமே வயநாடு மக்கள் இந்த சோகத்தில் இருந்து மீண்டு வர தங்களால் முடிந்த பண உதவி செய்து வருகிறார்கள்.

தொடர்ந்து பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்துவரும் நிலையில் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இணைந்து ரூ. 20 லட்சம் வயநாடு மக்களுக்காக பண உதவி செய்துள்ளனர்.

இந்த தகவலை விக்னேஷ் சிவனே தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.

Comments are closed.