ஹமாஸ் தலைவரின் இறுதி ஊர்வலம் ஈரான் நாட்டு உயர் தலைவர் அயத்துல்லா அலி காமேனி (Ayatollah Ali Khamenei) தலைமையில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேலின் தாக்குதலில் காசாவில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 39,445 என ஹமாஸ் நடத்தும் பிராந்தியத்தின் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே (Ismail Haniyeh) கொல்லப்பட்டதற்கு இஸ்ரேல் மீது ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.
இந்நிலையில், இஸ்மாயில் ஹனியேயின் உடல் தோஹாவில் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்பு, அவரின் இறுதி ஊர்வலம் ஈரான் தலைவர் அயத்துல்லாவின் தலைமையில் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தெஹ்ரான் தாக்குதல் குறித்து இஸ்ரேல் கருத்து தெரிவிக்க மறுத்த நிலையில், ”ஈரான் எனும் இஸ்லாமிய குடியரசின் பிரதேசத்தில், தியாகியாகிய இஸ்மாயில் ஹனியேயின் இரத்தத்திற்கு பழிவாங்குவது எங்கள் கடமை” என ஈரான் நாட்டு தலைவர் அயதுல்லா சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த புதன்கிழமை அதிகாலை முதல் ஹனியேவின் படுகொலையைக் கண்டித்து மக்கள் பலர், ஈரான் முழுவதும் உள்ள நகரங்களில் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது தெஹ்ரானின் பாலஸ்தீன சதுக்கத்தில் கூடிய நூற்றுக்கும் மேற்பட்டோர், ”இஸ்ரேலுக்கு மரணம், அமெரிக்காவுக்கு மரணம்” என எச்சரிக்கை வெளியிட்டுள்ளனர்.
Comments are closed.