கடுமையான போட்டி நிலவும் 6 மாகாணங்களில் புயலாக மாறும் கமலா ஹாரிஸ்

14

தேர்தல் களத்தில் இருந்து ஜோ பைடன் விலகியதன் பின்னர், கடும் போட்டி நிலவும் 7ல் 6 மாகாணங்களில் கமலா ஹாரிஸ் புயலாக மாறியுள்ளதாக புதிய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

ப்ளூம்பெர்க் செய்திகள் முன்னெடுத்த ஆய்வுகளிலேயே கமலா ஹாரிஸின் ஆதரவு கரம் ஓங்கியுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜூலை 24 முதல் 28ம் திகதி வரையான நாட்களில் முன்னெடுக்கப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில்,

கடுமையான போட்டி நிலவும் 6 மாகாணங்களில் புயலாக மாறும் கமலா ஹாரிஸ் | Kamala Harris Gaining Ground 6 Swing States

மிச்சிகனில் டிரம்பை விட ஹாரிஸ் 11 சதவீத புள்ளிகள் முன்னிலை வகிக்கிறார். ஆனால், அரிசோனா, விஸ்கான்சின் மற்றும் நெவாடாவில் டிரம்பை விட ஹாரிஸ் 2 சதவீத புள்ளிகள் முன்னிலையில் உள்ளார்.

பென்சில்வேனியாவில் டொனால்டு ட்ரம்ப் 4 புள்ளிகள் முன்னிலை, வட கரோலினாவில் 2 சதவிகிதம் முன்னிலை. ஜார்ஜியாவில் இருவருக்கும் ஒரே பலம். ஏழு மாகாணங்களில் விஸ்கான்சின் மட்டுமே ட்ரம்ப் தனது வெற்றி வாய்ப்பை ஜோ பைடனுடன் ஒப்பிடும்போது ஹாரிஸுடன் குறைத்துக் கொண்டார்.

ஜூலை 1 முதல் 5 வரையான கருத்துக்கணிப்பில் டொனால்டு ட்ரம்ப் அரிசோனாவில் பைடனை விட 3 சதவீத புள்ளிகளால் முன்னிலையில் இருந்தார்; ஜார்ஜியாவில் 1 புள்ளி; நெவாடாவில் 3 புள்ளிகள்; வட கரோலினாவில் 3 புள்ளிகள்; மற்றும் பென்சில்வேனியாவில் 7 புள்ளிகள்.

பைடன் மிச்சிகனில் 5 புள்ளிகளும், விஸ்கான்சினில் 3 புள்ளிகளும் முன்னிலை பெற்றிருந்தார். தற்போது ஜோ பைடன் விலகியுள்ள நிலையில், ட்ரம்பை பின்னுக்கு தள்ளி, கமலா ஹாரிஸ் 6 மாகாணங்களில் முன்னிலை கண்டுள்ளார் என்றே தகவல் வெளியாகியுள்ளது.

மட்டுமின்றி, துணை ஜனாதிபதி யார் என அறிவித்த பின்னர், இந்த 7 மாகாணங்களுக்கும் சூறாவளி சுற்றுப்பயணம் ஒன்றை இரு வேட்பாளர்களும் முன்னெடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Comments are closed.