கனடாவில் (Canada) விளையாட்டுத் துப்பாக்கிகளை பயன்படுத்துவது தொடர்பில் கனேடிய பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கனடாவில் விளையாட்டுத் துப்பாக்கிகளின் பயன்பாடு தற்போது அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இவ்வாறு விளையாட்டுத் துப்பாக்கிகளை பயன்படுத்தும் போது கனேடிய மக்கள் அச்சம் அடைவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அண்மையில், எல்கின் துறைமுகப் பகுதி கரையோரத்தில் இரு நபர்கள் துப்பாக்கிகளுடன் நடமாடுவதாக பொலிஸாருக்கு முறைப்பாடொன்று கிடைத்திருந்தது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, அது விளையாட்டுத் துப்பாக்கி என பொலிஸார் கண்டுபிடித்தனர்.
இந்நிலையில், இவ்வாறான விளையாட்டுத் துப்பாக்கிகளையும் உண்மையான துப்பாக்கிகளையும் பிரித்தறிவது கடினமாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனவே, இவ்வாறு உண்மையான துப்பாக்கிகளைப் போன்ற விளையாட்டுத் துப்பாக்கிகளை பயன்படுத்துவது பொருத்தமற்ற செயல் என பொலிஸார் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
இவ்வாறான விளையாட்டுத் துப்பாக்கிகளை பயன்படுத்துவது பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எனவும் இது தொடர்பில் பொறுப்புணர்வுடன் செயற்படுமாறும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Comments are closed.