தன் தாய் இளவரசி டயானாவின் நகைகளை இளவரசர் ஹரியின் மனைவி மேகன் அணிவதில் இளவரசர் வில்லியமுக்கு விருப்பம் இல்லையாம்.
இளவரசர் ஹரி, விவாகரத்து பெற்றவரும், அமெரிக்க நடிகையுமான மேகனை திருமணம் செய்யப்போவதாக கூறியது, அவரது அண்ணன் வில்லியமுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை.
மேகனை மணந்துகொள்வதில் அவசரப்படாதே என அவர் தனது தம்பிக்கு ஆலோசனை கூறியுள்ளார். ஆனாலும், ஹரி யார் சொன்னதையும் கேட்கவில்லை.
திருமணம் நெருங்க நெருங்க, அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையே உரசல் முற்றியுள்ளது.
ஆகவே, ஹரியின் மணமகளான மேகனை, தன் தாய் டயானாவின் நகைகள் எதையும் அணியவிடக்கூடாது என தங்கள் பாட்டியாரான மறைந்த மகாராணி எலிசபெத்திடம் வற்புறுத்தினாராம் வில்லியம்.
விடயம் என்னவென்றால், வில்லியமுடைய மனைவி கேட், டயானாவின் மோதிரத்தை அணிந்திருந்திருக்கிறார்.
எப்படியும், திருமணத்தின்போது டயானாவின் நகைகள் எதையும் மேகன் அணியவில்லை. என்றாலும், வரவேற்பு நிகழ்ச்சியின்போது மேகன் டயானாவின் மோதிரம் ஒன்றை அணிந்துகொண்டார்.
இந்த விடயங்கள், ராஜ குடும்ப எழுத்தாளரான ராபர்ட் ஜாப்சன் என்பவர் எழுதியுள்ள Catherine, The Princess Of Wales : The Biography என்னும் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
Comments are closed.