வாக்காளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

20

சிறிலங்காவின் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் (Presidential Election) வாக்களிக்கவுள்ளோருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிக்க முடியாது போகுமென்ற அச்சத்தைக் கொண்டுள்ள வாக்காளர்கள், பிறிதொரு வாக்கெடுப்பு நிலையம் ஒன்றில் வாக்களிப்பதற்கான வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை அனைத்து மாவட்டங்களினதும் தெரிவத்தாட்சி அலுவலர் அல்லது மாவட்ட தேர்தல்கள் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ள முடியும்.

குறித்த விண்ணப்பங்களை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல்கள் ஆணைக்குழு, தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகம், சரண மாவத்தை, இராஜகிரிய எனும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை விண்ணப்பதாரி தாம் வசிக்கின்ற பிரதேசத்தின் கிராம அலுவலர் மூலம் விண்ணப்பப்பத்திரத்தை சான்றுப்படுத்த வேண்டும் என்பதுடன், கிராம அலுவலரின் சான்றுப்படுத்தல் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.