பாடகி சின்மயி சினிமா துறையில் பெண்கள் மீது நடக்கும் பாலியல் சீண்டல்கள் பற்றி நீண்டகாலமாக குரல் கொடுத்து வருகிறார். பல பிரபலங்கள் பற்றியும் அவர் இதுவரை புகார் கூறி இருக்கிறார்.
தற்போது பிரபல வில்லன் நடிகர் ஜான் விஜய் பற்றி பெண் ஒருவர் கூறிய பாலியல் புகாரை சின்மயி தனது X தள கணக்கில் பகிர்ந்து இருக்கிறார்.
“நடிகர் ஜான் விஜய் சென்னையில் இருக்கும் பிரபல கிளப்கள் மற்றும் பப்களுக்கு ரெகுலராக வருகிறார். அங்கு அவர் பெண்களிடம் தவறான நோக்கத்தில் தொடர்ந்து அணுகுவார்.”
“அவருக்கு No சொன்னலும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார். தான் செலிபிரிட்டி என்பதால் Yes சொல்ல வேண்டும் என தொடர்ந்து பின்தொடர்ந்து தொல்லை கொடுத்துக்கொண்டிருப்பார்.”
“பேச கூட விருப்பமில்லை என சொன்னாலும் அவர் பல பெண்களுக்கு தொல்லை கொடுக்கிறார்” என அந்த பெண் கூறி இருக்கிறார்.
Comments are closed.