பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘LIK’ படத்தின் First லுக் போஸ்டர்.. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கவிருந்தாரா

12

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து வெளிவந்த திரைப்படம் லவ் டுடே. இப்படம் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.

இப்படத்தை தொடர்ந்து ஹீரோவாக நடிக்க முடிவு செய்த பிரதீப் ரங்கநாதன், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIC எனும் படத்தில் கமிட்டானார். ஆனால், இந்த படத்தின் தலைப்பு மீது சர்ச்சை எழுந்த காரணத்தினால், தற்போது LIK (love insurance company) என தலைப்பை மாற்றியுள்ளனர்.

நேற்று இதற்கான அறிவிப்பு வெளிவந்த நிலையில், இன்று First லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் சீமான் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே. சூர்யா, க்ரீத்தி ஷெட்டி உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.

இந்த LIK படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது சிவகார்த்திகேயன் தான். எஸ்.கே. 17 திரைப்படமாக உருவாகவிருந்தது தான் LIK. விக்னேஷ் சிவன் – சிவகார்த்திகேயன் இப்படத்திற்காக இணையவிருந்த நிலையில், VFX காரணமாக படத்தின் பட்ஜெட் அதிகரித்தது.

இதனால் இப்படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த கதையை தான் தற்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து விக்னேஷ் சிவன் எடுத்து வருகிறார் என சொல்லப்படுகிறது.

Comments are closed.