நடிகை வனிதாவின் மகன் ஹீரோவாக அறிமுகமாகும் படம்.. First லுக் போஸ்டர் இதோ

11

திரையுலகில் மூத்த நடிகர்களில் ஒருவர் விஜயகுமார். இவருடைய மகள் வனிதா விஜயகுமாரின் மூத்த மகன் தான் விஜய் ஸ்ரீ ஹரி.

இவர் தனது தாத்தாவின் கண்காணிப்பில் வளர்ந்தார். வெளிநாட்டிற்கு சென்று அன்று சினிமா சம்மந்தமான படிப்பை முடித்துவிட்டு, குறும் படங்கள் எடுத்து வந்தார் விஜய் ஸ்ரீ ஹரி.

இந்த நிலையில், தற்போது ஹீரோவாகவும் களமிறங்கியுள்ளார். ஆம், இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் மாம்போ. இப்படத்தில் நிஜ சிங்கத்தை நடிக்க வைத்துள்ளனர்.

இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள விஜய் ஸ்ரீ ஹரிக்கு திரையுலகினர் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மாம்போ படத்தின் First லுக் போஸ்டரை நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

ஹீரோவாக அறிமுகமாகியுள்ள விஜய் ஸ்ரீ ஹரி, கார்த்தி நடிப்பில் வெளிவந்த சகுனி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.