உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்கள் பட்டியல்: சுவிட்சர்லாந்துக்கு நான்காவது இடம்

6

2024ஆம் ஆண்டுக்கான, உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்கள் பட்டியலில் சுவிட்சர்லாந்து நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது.

Henley Passport Index என்னும் அமைப்பு, உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்கள் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டுவருகிறது.

ஒரு நாட்டின் பாஸ்போர்ட் மூலம் எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம் என்பதன் அடிப்படையில் இந்த தரவரிசை நிர்ணயிக்கப்படுகிறது.

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ள நாடு, சிங்கப்பூர்.

சிங்கப்பூர் பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி, 195 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம் என்பதால், பட்டியலில் அந்நாட்டுக்கு முதலிடம்!

இரண்டாவது இடத்தை பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் பிடித்துள்ளன.

மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ள நாடுகள், ஆஸ்திரியா, பின்லாந்து, அயர்லாந்து, லக்ஸம்பர்க், நெதர்லாந்து, தென்கொரியா மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் பிடித்துள்ளன.

நான்காவது இடத்தை, சுவிட்சர்லாந்துடன் பெல்ஜியம், டென்மார்க், நியூசிலாந்து நோர்வே மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.