நடிகை அமலா பால் தமிழ் மற்றும் மலையாளத்தில் ஏராளமான படங்கள் நடித்து இருக்கிறார். அவருக்கு கடந்த வருடம் திருமணம் ஆன நிலையில் தற்போது குழந்தை பிறந்திருக்கிறது.
அவர் ஏற்கனவே நடித்து முடித்த லெவல் கிராஸ் என்ற படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது. அதன் ப்ரோமோஷனுக்காக அமலா பால் சில பேட்டிகள் கொடுத்து இருக்கிறார்.
அதில் தான் முதலில் நடிக்க மறுத்து அதன் பின் மிகப்பெரிய ஹிட் ஆன படம் பற்றி அமலா பால் பேசி இருக்கிறார்.
ராட்சசன் படத்தின் கதையை இயக்குனர் ராம் குமார் முதலில் கூறும்போது அமலா பாலுக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். அவர் படத்தில் நடிக்க மறுத்த நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் தான் பேசி கதையை பற்றி தெளிவாக கூறி நடிக்க சம்மதிக்க வைத்தாராம்.
ராம் குமார் கூச்ச சுபாவம் கொண்டவர், அதனால் அவர் கதையை அமலா பாலிடம் சொல்ல திணறி இருக்கிறார். அதை பற்றி விஷ்ணு விஷால் தெளிவாக சொன்னதால் தான் அதில் நடித்தேன் என அமலா பால் தற்போது பேட்டி அளித்து இருக்கிறார்.
Comments are closed.