சுற்றுலா பயணிகளின் வருகையில் மாற்றம்

13

நாட்டிற்கு ஜூன் மாதத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய இந்த மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் மாத்திரம் 109, 393 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட தரவுகளிலிருந்து தெரியவந்துள்ளது.

மேலும் ரஷ்யா, பிரித்தானியா, ஜேர்மன், சீனா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிலிருந்தும் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Comments are closed.