​இன்றைய ராசி பலன் 23.07.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

15

இன்றைய ராசிபலன் ஜூலை 23, 2024, குரோதி வருடம் ஆடி 25, செவ்வாய்க் கிழமை, சந்திரன் மகரம் ராசியில் சஞ்சரிக்கிறார். மிதுனம் ராசியில் உள்ள திருவாதிரை, புனர்பூசம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று திருமணம் வாழ்க்கை இனிமையான பலனைத் தரும். உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் கோபத்தை கட்டுப்படுத்தி செயல்படவும். மூத்த அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.. சமூகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். உங்களின் நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க முயற்சி செய்வீர்கள்.

ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று அரசு வேலையில் உள்ளவர்கள் நேர்மையாக செயல்பட வேண்டிய நாள். இல்லையெனில் பெரிய பிரச்சனையை சந்திக்க நேரிடும். குடும்பத்தில் சகோதர, சகோதரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். குடும்பத்தில் சில சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வியாபாரத்தில் கடினமாக உழைக்க வேண்டியது அவசியம். உங்களின் செயல்பாடு வேகம் பெறும்.

மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. இன்று இனிமையாக பேசுவது அவசியம். குடும்பத்தில் சில வாதங்கள் ஏற்படலாம். தந்தையின் ஆலோசனை சரியான நேரத்தில் கிடைக்கும். உங்கள் வேலையை சரியான நேரத்தில் செய்து முடிக்க முயற்சி செய்யவும்.

கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். வியாபாரத்தில் புதிய திட்டங்களால் முன்னேற்றம் அடைவீர்கள். புதிய வாய்ப்புகளைப் பெற அதிகம் ஓட வேண்டியது இருக்கும். பணியிடத்தில் சாதகமான சூழ்நிலை இருக்கும். உங்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்காக நேரத்தை ஒதுக்க முயற்சி செய்யவும். இன்று முதலீடு செய்ய சாதகமான நாள்.

சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று மாணவர்களுக்குமன உளைச்சல் ஏற்படும். தேர்வு தொடர்பாக சில தடைகள் சந்திக்க நேரிடும். உங்களின் வேலையில் உள்ள பிரச்சனைகள் உடன் பிறந்தவர்களின் ஆதரவால் தீரும். இன்று குடும்ப செலவுகள் அதிகரிக்கும். இன்று கடன் வாங்குவது, கொடுப்பதைத் தவிர்க்கவும். காதல் வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். கவனமாக சூழலை கையாளவும்.

கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் சமூக வட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் சொத்து தொடர்பான பிரச்சனைகள் சந்திக்க நேரிடும். புதிய சொத்து வாங்க நினைப்பவர்கள் ஆவணங்களை கவனமாக சோதிக்கவும். உங்களின் வியாபாரத்தில் திடீர் பண ஆதாயம் பெற வாய்ப்புள்ளது. இன்று உங்களுக்குத் தெரிந்த விஷயங்களை மட்டும் செய்ய அதில் சிறப்பான வெற்றியை பெற்றிடலாம்.

துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று பிள்ளைகளின் திருமணம் தொடர்பான மன குறை தீரும். பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பழைய உடல் நலப் பிரச்சனைகள் மீண்டும் தொந்தரவு தர வாய்ப்புள்ள. மாணவர்கள் போட்டிகளில் வெற்றி கிடைக்கும். உங்களின் பண பலம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையுடன் வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும்.

விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உற்றார், உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். வேலை வாய்ப்புக்காக காத்திருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் பதவி, கௌரவம் உயரும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களுடன் நல்ல உறவு அதிகரிக்கும். அரசாங்கத் திட்டத்தின் மூலம் பலன் பெறுவீர்கள். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டில் சுப நிகழ்வுகள் நடக்கும்.

தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் தொழிலில் எதிரிகளை சிறப்பாக சமாளிப்பீர்கள். பின்பு சோம்பலை கைவிட்டு சுறுசுறுப்பாக செயல்படவும். உங்கள் செயலில் கூடுதல் கவனம் தேவை. சிலருடன் சேர்ந்து செய்யக்கூடிய வியாபாரத்தில் வெற்றி அதிகரிக்கும். காதலுக்காக நேரத்தை ஒதுக்குவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக பயணம் செல்ல நினைப்பீர்கள்.

மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பம் மற்றும் பணியிடத்தில் பாதகமான சூழ்நிலை மாறும். உங்களின் எதிர்காலத் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்துவீர்கள். பணியிடத்தில் அனைத்து பணிகளையும் சரியான நேரத்தில் செய்து முடிக்க முடியும். அதிகாரிகளுடன் சில மோதல்கள் ஏற்படலாம். சிலருக்கு வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். உடல் நிலையில் கவனம் தேவை.

கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று அரசு வேலையில் உள்ளவர்களுக்கு இடம் மாற்றம் தொடர்பான விஷயங்கள் நடக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் சுற்றுலா செல்ல வாய்ப்புள்ளது. மாணவர்கள் புதிய விஷயங்களை கற்க வாய்ப்பு கிடைக்கும். இன்று குடும்ப பொறுப்புக்களைச் சிறப்பாக நிறைவேற்றுவீர்கள், வீட்டுக்கு தேவையான பொருட்களையும் வாங்கி மகிழ்வீர்கள்.

மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று மாணவர்கள் விளையாட்டு, போட்டி தேர்வில் வெற்றி பெறலாம். எதிர்காலம் தொடர்பான கவலை குறையும். பணியிடத்தில் பிறரை நம்பி செயல்பட வேண்டாம். உங்களின் முடிவுகளில் கவனம் தேவை. இன்று உங்களின் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வேலையை முடிப்பதில் கவனம் தேவை.

Comments are closed.