நடிகர் வடிவேலுவை வைத்து இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சிம்புதேவன்.
வடிவேலுவிற்கு இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை கொடுத்தது. இந்த பட பாணியில் விஜய்யை வைத்து புலி என்ற படத்தை இயக்கியிருந்தார் சிம்புதேவன்.
ஆனால் இப்படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு வெற்றியை கொடுக்கவில்லை.
தற்போது இவர் யோகி பாபுவை வைத்து போட் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
போட் பட புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் சிம்புதேவன் பேசும்போது, புலி படத்தில் தேவையான அனைத்து விஷயங்களையும் சரியாகவே செய்தேன், ஆனால் அந்த சமயத்தில் ரெய்டு உள்ளிட்ட பிரச்சனைகளால் படம் வெளியானதும் கடும் விமர்சனங்களை சந்தித்ததாக கூறியுள்ளார்.
இம்சை அரசன் படம் போலவே அனைவருக்குமான படமாக ரசிகர்களை கவரும் என்று எதிர்ப்பார்த்ததாகவும் ஆனால் படம் எதிர்ப்பார்த்த அளவில் ரசிகர்களை கவர தவறிவிட்டதாக சிம்புதேவன் பேட்டியில் கூறியுள்ளார்.
Comments are closed.