Today Horoscope இன்றைய ராசி பலனை (ஜூலை 22, 2024 திங்கட் கிழமை) இன்று சந்திரன் பகவான் மகரம் ராசியில் உத்திராடம், திருவோணம் நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். இன்று சித்த யோகம் கூடிய தினம். இன்று மிதுனம் ராசியினருக்கு இன்று முழுவதும் சந்திராஷ்டமம் உள்ளது என்பதால் கவனமாக இருக்கவும்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். இன்று மகிழ்ச்சி அதிகரிக்கும். சமயம், சமூக பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். இன்று உங்களின் செலவு அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகளின் திருமணம் தொடர்பாக சில நல்ல செய்திகள் பெறலாம். பணியிடத்தில் சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவை பெறுவீர்கள்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று விருந்து, விஷேசங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். பெற்றோரின் ஆசீர்வாதம் கிடைக்கும். புதிய வருமான வழிகள் திறக்கும். இன்று மனதிற்கு அமைதியைத் தரக்கூடிய நாள். பெற்றோருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். இது உங்களின் பேச்சை கட்டுப்படுத்தவும். குழந்தைகளின் செயல் மகிழ்ச்சியைத் தரும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று சட்ட பிரச்சனைகளில் கவனமாக செயல்படவும். இன்று உங்களின் மன அழுத்தம் அதிகரிக்கும். வேலைகளை சரியாக கவனமாக செய்து முடிக்கவும். குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடுவீர்கள். வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பாக கவலை ஏற்படும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று தடைப்பட்ட வேலைகள் செய்து முடிப்பீர்கள். உங்களின் முயற்சிகளுக்கு முழு பலன் கிடைக்கும். இன்று வெளி உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும். இல்லையெனில் உடல்நிலை பிரச்சினை அதிகரிக்கும். வணிகஸ்தர்கள் சில புதிய ஒப்பந்தங்கள் பெறுவீர்கள். உங்கள் பேச்சில் இனிமையை கடைப்பிடிக்கவும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரம் செய்யக் கூடியவர்களுக்கு சிறப்பான நாளாக அமையும்.. எதிர்காலம் தொடர்பான முயற்சிகள் சிறப்பான பலனை தரும். உங்கள் வேலைகளை சரியான நேரத்திலும் முடிக்க முடியும். மாணவர்கள் போட்டியில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். நண்பர்களின் உதவியால் பண பலன் பெறுவீர்கள்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரம் தொடர்பாக அலைச்சல் அதிகரிக்கும். பயணம் செய்ய வேண்டி இருக்கும். நீண்ட காலமாக எதிர்பார்த்த சிலர் ஒப்பந்தங்கள் கிடைத்து மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களுக்காக பரிசு வழங்க நினைப்பீர்கள். உங்கள் வேலைகளை கண்ணும் கருத்துமாக செய்து முடிக்க வேண்டிய நாள்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரிகளுக்கு மிகவும் முக்கியமான நாளாக இருக்கும். இன்று புத்திசாலித்தனமாக எந்த ஒரு முடிவையும் எடுக்கவும். ஆபத்தான வேலைகளை தவிர்ப்பது அவசியம். உங்கள் வார்த்தையில் இனிமை தேவை. சொத்து வாங்குதல், விற்பது தொடர்பான விஷயங்களில் கவனமாக செயல்படவும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் தைரியம் மற்றும் வீரத்தால் எதிரிகளின் சதி திட்டங்களை வீழ்த்துவீர்கள். உங்களின் எண்ணங்கள் வெற்றி பெறும். குழந்தைகள் மீது அன்பு அதிகரிக்கும். பணியிடத்தில் பாராட்டு கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு உண்டாகும். இன்று கடன் வாங்குதல், கொடுப்பதைத் தவிர்க்கவும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று மாணவர்கள் படிப்பில் முழு கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள். இன்று உங்களின் புத்திசாலித்தனத்தால் புதிய முயற்சிகள் வெற்றியடையும். வியாபாரம் செழிக்கும். பிறரிடம் சிக்கி உள்ள பணம் திரும்ப கிடைக்க வாய்ப்பிருக்கிறது. பிள்ளைகளின் உடல் நலம் மேம்படும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று பெரிய அளவில் பணம் வருவாய் இருக்கும். தொழிலில் அதிக லாபம் பெறுவீர்கள். வாழ்க்கைத் துணை மூலம் மகிழ்ச்சியை அடைவீர்கள். இன்று வண்டி, வாகன பயன்பாட்டில் கவனம் தேவை. உங்களின் செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. குடும்பத் தகராறுகள் தீரும். உறவுகளின் ஆதரவு கிடைக்கும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் பொறுமையுடன் எடுக்கக்கூடிய முடிவுகள் சிறப்பான பலனை தரும். அதனால் சிந்தித்து செயல்படவும். இன்று உங்களின் அன்றாட தேவைக்காக அதிக பணம் செலவிட வாய்ப்புள்ளது. புதிய தொழிலில் முதலீடு செய்வதில் கவனம் தேவை.. உங்களின் பிள்ளைகளின் வேலை தொடர்பான முயற்சிகள் வெற்றி தரும். மாணவர்கள் தேர்வில் சிறப்பான வெற்றியைப் பெறுவீர்கள்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று உடல் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்படும். சிலருக்கு செரிமானம், வயிறு தொடர்பான பிரச்சனைகள் உண்டாகும். வியாபாரிகள் புதிய திட்டத்தில், முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். கடன் விஷயத்தில் கவனம் தேவை.. தந்தையின் ஆலோசனை நற்பலனைத் தரும். எந்த ஒரு கஷ்டத்திலும் உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும்.
Comments are closed.