மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் பாமா. இவர் தமிழில் ‘எல்லாம் அவன் செயல்’ உட்பட சில படங்களில்நடித்துள்ளார்.
இவர் கடந்த 2020ம் ஆண்டு அருண் என்ற தொழிலதிபரைத் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கவுரி என்ற மகள் இருக்கிறார்.
சமீபத்தில் பாமா, சில தனிப்பட்ட காரணத்தால் தனது கணவரை பிரிந்ததாக பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் பாமா திருமணம் பற்றி தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சை கிளப்பி இருக்கிறது.
அது என்னவென்றால், “பெண்களாகிய நமக்கு திருமணம் தேவையா? வேண்டாம். தங்களுடைய பணத்தை கொடுத்து எந்த பெண்ணும் திருமணம் செய்ய கூடாது. உங்களுடைய பணத்தை பறித்து பறித்துக் கொண்டு தற்கொலைக்குத் தள்ளுவார்கள். மேலும் உங்களுடைய வாழ்க்கைக்குள் வருபவர் எப்படிப்பட்டவர் என்பதை தெரியாமல் திருமணம் செய்யக் கூடாது” என்று கூறியிருந்தார்.
இந்த விஷயம் சர்ச்சையான நிலையில் இதற்கு விளக்கம் கொடுத்து இருக்கிறார் பாமா. அதில், வரதட்சணை கொடுத்து திருமணம் செய்ய வேண்டாம் என்பது தொடர்பாக தான் பேசினேன். பெண்கள் யாரும் திருமணம் செய்யக்கூடாது என்று சொல்லவில்லை என பாமா தெரிவித்துள்ளார்.
Comments are closed.