தனது கணவருடன் எடுத்த போட்டோவை வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சரண்யா..கியூட் போட்டோ

12


ஒரு தொகுப்பாளராக, செய்தி வாசிப்பாளராக இருந்து பின் சின்னத்திரை நடிகையாக வலம் வருபவர் நடிகை சரண்யா துரடி.

இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை தொடர் மூலம் சின்னத்திரையில் நடிக்க தொடங்கியவர் ஆயுத எழுத்து, வைதேகி காத்திருந்தாள் உள்ளிட்ட ஏராளமான சீரியல்களில் நடித்து பிரபலம் ஆனார்.

இடையில் எந்த சீரியலிலும் கமிட்டாகாமல் இருந்தவர் இப்போது விஜய்யில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தங்கமயில் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சரண்யா துரடி சீரியலில் நடித்துவந்தாலும் அதிகம் சுற்றுலா செல்ல விரும்புபவர். சமீபத்தில் அவர் துருக்கி சென்று வந்தார், அங்கு எடுத்த புகைப்படங்கள், வீடியோக்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு வந்தார்.

இந்த நிலையில் நடிகை சரண்யா துரடி தனது கணவருடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

அந்த அழகான புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வாழ்த்து கூறி வருகிறார்கள்.

Comments are closed.