இம்ரான் கான் கட்சிக்கு தடைவிதிக்க பாகிஸ்தான் அரசு முடிவு

15

பாகிஸ்தானின்(Pakistan) முன்னாள் பிரதமர் இம்ரான் கான் (Imran Khan) கட்சியான பாகிஸ்தான் தெரீக்- இ-இன்சாஃப் கட்சிக்கு தடைவிதிக்க முடிவு செய்துள்ளதாக பாகிஸ்தான் தகவல்தொடர்பு துறை மந்திரி அட்டாயுல்லா டரார் தெரிவித்துள்ளார்.

குறித்த கட்சியானது நாட்டுக்கு எதிரான செயலில் ஈடுபட்டுள்ளமையினால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இம்ரான் கான் மீது தொடரப்பட்டட பல்வேறு வழக்குகளில் மூன்று முக்கிய வழக்குகளில் இரண்டில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு, ஒரு வழக்கில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமையினால் அவர் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை.

இந்த நிலையில் அக்கட்சியை தடை செய்வதற்கு போதுமான தெளிவான சாட்சிகள் உள்ளது. தடைக்கான வேலைகளை அந்நாட்டு அரசு தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளது.

இம்ரான் கட்சிக்கான குறைந்தபட்சம் இடங்கள் நாடாளுமன்றத்தில் சட்டவிரோதமாக மறுக்கப்பட்டது என பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் கடந்த வாரம் தெரிவித்திருந்தது.

இது ஆளும் கூட்டணி ஆட்சிக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இம்ரான் கான் கட்சி பெப்ரவரி 8ஆம் தேதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கப்பட்டது.

இதனால் அவரது கட்சி வேட்பாளர்கள் சுயேட்சையாக போட்டியிட்டு அதிக இடங்களில் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.