தென்மேற்கு இங்கிலாந்தில்(England) இருவரை கொலை செய்து அவர்களின் உடல் பாகங்களை பயணப்பைகளுக்குள் வைத்து, பாலம் ஒன்றின் அருகில் வைத்ததாக கூறப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
34 வயதான அவர், 61 மற்றும் 71 வயதான இருவரை கொலை செய்து அவர்களின் உடல்களின் துண்டுகளை, இரண்டு பயணப்பைகளுக்குள் பொதியிட்டு பின்னர் பாலம் ஒன்றின் அருகில் அவற்றை விட்டுச்சென்றுள்ளார்.
இந்தநிலையில், கைது செய்யப்பட்டுள்ள அவர் இன்று(15) லண்டன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுகிறார்.
குறித்த சந்தேக நபர் , கொலை செய்யப்பட்டவர்களுடன் முன்னர் ஒன்றாக வாழ்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகரின் கிளிஃப்டன் தொங்கு பாலத்தின் அருகில் இரண்டு பயணப்பைகளில் இந்த உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட மூன்று நாட்களுக்கு பின்னரே சந்தேகநபர், கடந்த சனிக்கிழமையன்று கைது செய்யப்பட்டார்.
இந்தநிலையில் லண்டனில் உள்ள குறித்த இருவரின் வீட்டில் மேலும் சில உடல் எச்சங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
Comments are closed.