திரிஷா – நயன்தாரா இடையே ஏற்பட்ட மனஸ்தாபம்.. விஜய் படத்திலிருந்து தான் துவங்கியதா

13

நயன்தாரா மற்றும் திரிஷா இருவருமே திரையுலகில் முன்னணி நாயகிகளாக இருக்கிறார்கள். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வரும் நயன்தாரா, திரிஷா நல்ல தோழிகள் ஆவார்கள்.

ஆனால், சில ஆண்டுகள் இவர்கள் இருவரும் பேசாமல் கூட இருந்துள்ளனர். அதற்கு காரணம் குருவி எனும் படம் தான் என சொல்லப்படுகிறது.

விஜய் நடிப்பில் உருவான குருவி படத்தில் கதாநாயகியாக நடிக்க நயன்தாரா மற்றும் திரிஷா இருவரிடமும் பேச்சு வார்த்தை நடந்து வந்ததாம். ஆனால், இறுதியில் திரிஷாவிற்கு தான் இந்த வாய்ப்பு கிடைத்தது.

இதனால் திரிஷா தனது வாய்ப்பை தட்டி பறித்துவிட்டார் என நயன்தாரா மனஸ்தாபத்தில் இருந்தாராம். இதன்பின் சில காலம் திரிஷாவும் நயன்தாராவும் பேசி கொள்ளவில்லையாம்.

ஆனால், இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என முயற்சி செய்த திரிஷா, நடிகை நயன்தாராவிடம் பேச துவங்கியுள்ளார். பின் இருவரும் நல்லபடியாக பேச துவங்கியுள்ளனர். இதுகுறித்து நயன்தாரா மற்றும் திரிஷா இருவருமே பேட்டிகளில் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.