தமிழ் சினிமாவில் கடந்த 1993ம் ஆண்டு வெளியான அர்ஜுனின் ஜென்டில்மேன் என்கிற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக களமிறங்கியவர் ஷங்கர்.
31 ஆண்டுகள் திரையுலகில் இருக்கும் ஷங்கர் இதுவரை வெறும் 14 திரைப்படங்களை மட்டுமே இயக்கியுள்ளார், ஆனால் ஒவ்வொன்றும் பெரிய அளவில் பேசப்படும் படங்கள்.
படம் இயக்கினோம், வெற்றிக்கண்டோம் என இல்லாமல் ரசிகர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தும் வகையில் படங்கள் இயக்கி வந்தார்.
வெற்றிப்படங்களை கொடுத்து தமிழ் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்துள்ளார்.
தெலுங்கில் ராம் சரணை வைத்து ஒரு படம், பாலிவுட்டின் டான் நாயகன் ரன்வீர் சிங்கை வைத்து படம் இயக்கும் ஷங்கர் இயக்கத்தில் நாளை கமல்ஹாசன் நடிப்பில் தயாரான இந்தியன் 2 படம் வெளியாக இருக்கிறது.
பல பிரம்மாண்ட படைப்புகளை கொடுத்த இயக்குனர் ஷ்ங்கரின் சொத்து மதிப்பு என்று ஒரு விவரம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
பல சொகுசு கார்கள், பிரம்மாண்ட வீடுகள் என வைத்திருக்கும் இயக்குனர் ஷங்கரின் சொத்து மதிப்பு ரூ. 1000 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
Comments are closed.