தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தை முடித்துவிட்டு கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து சத்யராஜ், ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார்கள் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், கூலி படத்தில் ரஜினியுடன் நடிக்க பகத் பாசிலிடம் கேட்டுள்ளனர். ஆனால், பகத் பாசில் இந்த வாய்ப்பை நிராகரித்து விட்டார் என சொல்லப்படுகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்றும் தெரியவில்லை.
கூலி படத்தில் பகத் பாசில் நடிக்க நிராகரிப்பு தெரிவித்த நிலையில், வேட்டையன் படத்தில் ரஜினியுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் பகத் பாசில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.