சிம்பு படத்தில் நடிக்கும் சூப்பர் ஸ்டார் – யார் இயக்குனர்?

13

நடிகர் சிம்பு, இப்போது செகண்ட் இன்னிங்சில் கலக்கி வருகிறார். தற்போது இவர் மணிரத்னம் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகும் தக் லைப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவு பெற்ற பின், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி STR 48படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகுவதால் இந்தப் படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்நிலையில் நடிகர் சிம்பு, பிரபல மலையாள இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப்புடன் இணைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ‘2018’ படத்தில் டொவினோ தாமஸ் நடித்தார். குறைந்த பொருட்செலவில் எடுத்தாலும், உலகத்தரத்தில் உருவாக்கப்பட்ட இப்படம், மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

தற்போது , ஜூட் ஆண்டனி ஜோசப்பின் சிம்பு கூட்டணியில் உருவான இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.

Comments are closed.