விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார் மாதம்பட்டி ரங்கராஜ்.
இவர் தமிழ் சினிமாவில் மெஹந்தி சர்க்கஸ் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதன்பின் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து பென்குயின் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது விளம்பர ஒன்றில் நடிகை அதிதி ஷங்கருடன் இணைந்து நடித்துள்ளார். ஆம், சமையல் விளம்பரத்தில் நடிகை அதிதி ஷங்கர், மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் கில்லி படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்திருந்த நடிகை ஜானகி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
நடிகை அதிதி ஷங்கர் தற்போது விஷ்ணு வர்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள நேசிப்பாயா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக அதர்வா படத்தில் நடிக்கவுள்ளார்.
திரைப்படங்கள் மட்டுமின்றி ஆடை விளம்பரங்கள் உள்ளிட்ட பல்வேறு விளம்பர படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.