கனடாவில் (Canada) விமானப் பயணங்கள் குறித்து விசேட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி,ரொறன்ரோ (Toront) பியர்சன் விமான நிலையத்தின் விமானப் போக்குவரத்து பாதிக்கப்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
ரொறன்ரோவில் கடுமையான வெப்பநிலை நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையிலே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எதிர்வுகூறலை கனடிய வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இதேவேளை, தென் ஒன்றாரியோ பகுதியில் கடுமையான வெப்பநிலையுடன் காற்று பலமாக வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடும் வெப்பநிலை காரணமாக விமானப் பயணங்கள் திட்டமிட்டவாறு மேற்கொள்ள முடியாமல் போகலாம் என பியர்சன் விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.
Comments are closed.