கொக்குதொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் ஆரம்பம்

14

முல்லைத்தீவு (Mullaitivu) – கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாய்வின், நான்காம் நாள் அகழ்வாய்வுச் செயற்பாடுகள் இன்றும் (08) தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதற்கு அமைவாக கொக்கிளாய் – முல்லைத்தீவு பிரதான வீதியின் மேல்படை அகழப்பட்டு, அகழ்வாய்வுச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று மேலும் கிரவல்படை வெளியேற்றப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, அகழ்வாய்வுப் பணிகள் இடம்பெறவுள்ளன.

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் பல அதிகாரிகளின் பங்குபற்றுதல்களுடன் இந்த நான்காம் நாள் அகழ்வாய்வுகள் இடம்பெற்று வருகின்றன.

Comments are closed.