சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம்: வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்

9

யாழ். சாவகச்சேரி (Chavakachcheri) வைத்தியசாலையில் (Base Hospital Chavakachcheri) சரியான பராமரிப்பு இல்லாததால் மருந்துகள் பழுதடைவதாக அந்த வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா முழு விளக்கமளித்துள்ளார்.

சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரத்துக்கு முழு விளக்கமளிப்பதற்காக நேற்று (06.07.2024) நடாத்தப்பட்ட ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “சில மருந்து வகைகளை குறித்த வெப்பநிலைக்கு கீழ் உள்ள பகுதியில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கும்.

இருப்பினும், சரியான பராமரிப்பு இல்லாததால் மருந்துகள் பழுதடைகின்றன. பழுதடைந்த மருந்துகளை நோயாளிகளுக்கு வழங்கும் போது அவை செயற்படுவதில்லை. எனவே, அவர்கள் சிரமப்பட்டு தனியார் வைத்தியசாலைகளை நாடுகின்றனர்” என தெரிவித்துள்ளார்

Comments are closed.