மனைவிகளுடன் ஜோடியாக வந்து வாக்களித்த ரிஷி சுனக்-கெய்ர் ஸ்டார்மர்

16

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் மற்றும் எதிர்கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மர் இருவரும் தங்கள் மனைவிகளுடன் ஜோடியாக வந்து வாக்களித்துச் சென்றனர்.

பிரித்தானியாவில் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (ஜூலை 04) நடைபெற்றுவருகிறது.

கன்சர்வேடிவ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக் மற்றும் தொழிலாளர் கட்சியின் வேட்பாளர் கெய்ர் ஸ்டார்மர் ஆகியோர் இன்று காலை தங்கள் மனைவிகளுடன் வாக்குச்சாவடிக்கு சென்றனர்.

சுனக் மற்றும் அக்ஷதா மூர்த்தி யார்க்ஷயரில் வாக்களித்தனர். ஸ்டார்மர் தனது மனைவி விக்டோரியாவுடன் வடக்கு லண்டனில் உள்ள கென்டிஷ் டவுனில் வாக்களித்தார்.

இம்முறை பிரித்தானியாவில் திட்டமிட்ட கால அட்டவணைக்கு 6 மாதங்களுக்கு முன்னதாகவே தேர்தல் நடத்தப்படுகிறது. பிரதமர் சுனக் இதை மே 22 அன்று அறிவித்தார்.

இன்று 5 கோடி வாக்காளர்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்கான பிரித்தானியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் எம்.பி.க்களை தேர்ந்தெடுக்கின்றனர்.

வாக்குப்பதிவு உள்ளூர் நேரப்படி இரவு 10 மணிக்கு ( இலங்கை நேரப்படி 05 ஜூலை அதிகாலை 2:30) முடிவடையும்.

பிரித்தானியாவில் வாக்குச் சீட்டு மூலம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில், அங்குள்ள குடிமக்கள் மட்டுமின்றி பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கையர்கள், இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள், அவுஸ்திரேலியர்கள் போன்ற காமன்வெல்த் நாடுகளின் குடிமக்களும் வாக்களிக்கலாம்.

Comments are closed.