பிரித்தானியாவில் பெருவாரியான ஆசனங்களைக் கைப்பற்றி மகத்தான வெற்றியை நோக்கி லேபர் கட்சி முன்னேறுவதாக தகவல் வெளிவருகிறது.
இதுவரை வெளியான தரவுகளின் அடிப்படையில் லேபர் கட்சி 187 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளதாகவும், ரிஷி சுனக்கின் கனசர்வேட்டிவ் கட்சி 32 ஆசனங்களுடன் கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மொத்தமுள்ள 650 ஆசனங்களில் 326 ஆசனங்களைக் கைப்பற்றும் கட்சியானது ஆட்சி அமைக்கும் என்ற நிலையில், லேபர் கட்சி 400 ஆசனங்களுக்கு மேல் கைப்பற்றும் என்றே இதுவரை வெளியான கருத்துக்கணிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் லேபர் கட்சியின் கெய்ர் ஸ்டார்மர் பிரித்தானியாவின் புதிய பிரதமராக பொறுப்புக்கு வருவார் என்றே தெரிய வருகிறது. Holborn மற்றும் St Pancras தொகுதியில் தமது வெற்றியை பதிவு செய்துள்ள கெய்ர் ஸ்டார்மர், மாற்றம் இங்குதான் தொடங்குகிறது… நாம் செயல்பட வேண்டிய தருணம் இது என குறிப்பிட்டுள்ளார்.
ரிஷி சுனக் அமைச்சரவையில் பாதுகாப்புச் செயலராக இருந்த கிராண்ட் ஷாப்ஸ் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார். Reform UK கட்சியின் தலைவர் Nigel Farage முதல்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ளார். முன்னாள் லேபர் கட்சி தலைவரான Jeremy Corbyn வெற்றி கண்டுள்ளார்.
Comments are closed.