நடிகர் விஜய்யின் கோட் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இன்னொரு பக்கம் தனது அரசியல் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் விஜய். தமிழக வெற்றிக் கழகத்தின் மாணவர்களுக்கான கல்வி விருது வழங்கும் விழாவின் இரண்டாவது கட்டம் இன்று நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்கும் முன்பு நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் ஒரு முக்கிய விஷயம் குறித்து பேசியுள்ளார்.
நீட் தேர்வு பற்றியும் அதில் உள்ள சிக்கல்கள் குறித்தும் தெளிவாக மாணவர்கள் முன்பு அவர் பேசியது இப்போது மக்களாலும் வரவேற்கப்படுகிறது.
இந்த தேர்வு தமிழ்நாட்டு மாணவ, மாணவிகளின் கிராமப்புற பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு மிகவும் பாதிப்பாக அமைந்துள்ளது, இது சத்தியமான உண்மை என பேச தொடங்கியவர் இதில் இருக்கும் 3 பிரச்சனைகள் குறித்து பேசியுள்ளார்.
Comments are closed.