தெலுங்கு சினிமாவில் தற்போது சென்சேஷனல் நடிகையாக இருப்பவர் ஸ்ரீலீலா. தனது நடனத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நடிகை ஸ்ரீலீலா தற்போது முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து வருகிறார்.
தமிழில் இவர் எப்போது அறிமுகமாக போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள். அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரீலீலா நடித்து வருகிறார் என கூறப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில், சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற தனியார் கல்வி நிறுவன நிகழ்வு ஒன்றில் சிறப்பு விருந்தினராக நடிகை ஸ்ரீலீலா கலந்துகொண்டார். அப்போது அவரிடம் கல்வி குறித்த சில விஷயங்களும், அவருடைய திரை வாழ்க்கையில் குறித்த விஷயங்களும் கேட்கப்பட்டது.
அதில், கோலிவுட் உங்களுக்கு பிடித்த நடிகை யார் என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ஸ்ரீலீலா “நடிகை நயன்தாரா” என கூறினார். அதன்பின் “ஒருவரை மட்டுமே எப்படி குறிப்பிட்டு சொல்லமுடியும், இங்கு நிறைய இன்ஸ்பிரேஷனஸ் இருக்கிறார்கள்” என்றார்.
Comments are closed.