ஒரே நாளில் வெளியாகும் 5 திரைப்படங்கள் ! எந்த படம் என்ன திகதி !

14

தமிழ் சினிமாவின் தயாரிப்பாளர்கள் தாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களை கொண்டாட்ட நாட்கள் , விடுமுறை நாட்கள் , வேறு பெரிய நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகாத நாட்களை குறி வைத்து வெளியிடுகின்றனர்.

ஆனால் இம்முறை வருகின்ற ஜூலை 5 ஆம் திகதி ஐந்து திரைபடங்கள் ஒரே நாளில் வெளியாகின்றது. இந்த நாளில் வேறு முன்னணி திரைப்படங்கள் வெளியாகாததே இதற்கு காரணமும் ஆகும். ஒரே நாளில் வெளியாக்கினாலும் இவை அனைத்து சிறிய திரைப்படங்கள் ஆகும்.

அவ்வாறே முரளி பாண்டியன் நடிக்கும் தேரடி , ஹாரூன் இயக்கத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு சோனியா அகர்வால் ஹீரோயினாக நடிக்கும் 7G மற்றும் இவற்றுடன் ஜமாகாதகன் , கௌண்டபாளையம் , நானும் ஒரு அழகி என மொத்தமாக 5 திரைப்படங்கள் ஜூலை 5 வெளியாகின்றது.

Comments are closed.