உலகநாயகன் கமல்ஹாசன் உட்பட பல பிரபலங்கள் நடித்த ’கல்கி 2898 ஏடி’ திரைப்படம் நேற்று முன்தினம் வெளியான நிலையில் இந்த படம் கலவையான விமர்சனம் பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்து ’ஆஹா என்ன ஒரு காவியம்’ என்று தனது சமூக வலைத்தளத்தில் பாராட்டியுள்ளார்.
பிரபாஸ் முக்கிய வேடத்தில் நடித்த ’கல்கி 2898 ஏடி’ என்ற திரைப்படத்தில் கமல்ஹாசன், தீபிகா படுகோன், விஜய் தேவரகொண்டா, துல்கர் சல்மான், ராஷ்மிகா மந்தனா, திஷா பதானி உள்பட பலர் நடித்துள்ளனர்.
நாக் அஸ்வின் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான இந்த படம் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான நிலையில் முதல் நாள் வசூல் மற்றும் சுமார் 200 கோடி என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் இந்த படத்தை ஏற்கனவே சில திரை உலக பிரபலங்கள் பார்த்து பாராட்டிய நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தளத்தில் இந்த படத்தை பாராட்டியுள்ளார். அவர் கூறியதாவது:
’கல்கி 2898 ஏடி’படம் பார்த்தேன், ஆஹா என்ன ஒரு காவியம், இயக்குனர் நாக் அஸ்வின் இந்திய சினிமாவை வேற லெவலுக்கு கொண்டு சென்று உள்ளார். படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அமிதாப் பச்சன், பிரபாஸ், கமல்ஹாசன், தீபிகா படுகோன் ஆகிய அனைவரும் மிகவும் சிறப்பாக நடித்துள்ளனர். ஆவலுடன் இரண்டாம் பாகத்திற்கு காத்திருக்கிறேன். கடவுள் இந்த படத்தை வெற்றியடைய ஆசிர்வதிக்கட்டும்’ என்று பதிவு செய்துள்ளார்.
Comments are closed.