நடிகர் மம்மூட்டியின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா

17

மலையாளத்தில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் மம்மூட்டி. 72 வயதிலும் இந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. Kannur Squad, காதல் தி கோர், பிரமயுகம் மற்றும் டர்போ உள்ளிட்ட பல தரமான திரைப்படங்களை கொடுத்தார்.

அடுத்ததாக Bazooka, Kadugannawa Oru Yatra ஆகிய இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகிறது. இந்த நிலையில், நடிகர் மம்மூட்டியின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 340 கோடி என தகவல் கூறுகின்றனர். மேலும் இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 10 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் என சொல்லப்படுகிறது.

கொச்சியில் நடிகர் மம்மூட்டிக்கு சொந்தமான பிரமாண்ட பங்களா ஒன்று இருக்கிறது. இந்த வீட்டின் விலை ரூ. 4 கோடி இருக்கும் என கூறுகின்றனர்.

Comments are closed.