இது எனக்கு குடும்பம் மாதிரி.. மேடையில் பேசிய நடிகை நயன்தாரா!

14

நடிகை நயன்தாரா பொதுவாக எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள மாட்டார், படங்களின் ப்ரோமோஷன் என்றால் கூட அவர் வரமாட்டார் என்ற பேச்சு சினிமா வட்டாரத்தில் உள்ளது.

இந்த நிலையில், நடிகை நயன்தாரா தனது நண்பரும், இயக்குனருமான விஷ்ணு வர்தனின் பட விழாவிற்கு சென்று கலந்துகொண்டு இருப்பது கோலிவுட் வட்டாரத்தில் உள்ளவர்களுக்கு ஆச்சிரியத்தை கொடுத்துள்ளது.

இதுகுறித்து மேடையில் பேசிய நயன்தாரா “நான் பொதுவாக எந்த விழாவிலும் கலந்துகொள்ள மாட்டேன். ஆனால், இந்த விழா எனக்கு ரொம்ப ஸ்பெஷல். ஏனென்றால் இது என்னுடைய இயக்குனர் விஷ்ணுவின் படம். என் நெருங்கிய தோழி அணுவின் படம். இது கிட்டதட்ட ஒரு குடும்பம் போல தான். அதனால் தான் இந்த விழாவிற்கு வரமுடியாது என நோ சொல்லவில்லை” என கூறினார்.

விஷ்ணு வர்தன் இயக்கத்தில் அடுத்ததாக நேசிப்பாயா எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் மறைந்த நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ் முரளி இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

இந்த இப்படத்தின் First லுக் வெளியிட்டு விழாவில் தான் நேற்று மாலை நடிகை நயன்தாரா கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியது தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.