பாரிஸ் கிளப் மற்றும் உரிய தரப்பினருடன் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதற்கு அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்கமைய, இது தொடர்பான ஒப்பந்தங்கள் நாளை (26.06.2024) கைச்சாத்திடப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இன்றைய (25) செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) நேற்று (24) மாலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பான விளக்கத்தை வழங்கியுள்ளார்.
குறிப்பாக நாடு திவாலாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டதன் பின்னர், இலங்கைக்கு உதவிகளை வழங்கிய நட்பு நாடுகளின் அரசாங்கத் தலைவர்கள், குறிப்பாக இந்தியா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளின் அரசாங்கத் தலைவர்களுடன் ஜனாதிபதி பெருமளவான கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.
இந்நிலையில், சீன அரசாங்கத்தின் தலைமைப் பாரிஸ் உதவிக் குழுக்கள் உலக சமூகத்துடனும், உள்ளூர் மற்றும் சர்வதேச நிபுணர்களுடனும் பெரும் எண்ணிக்கையிலான கலந்துரையாடல்களை நடாத்திய ஜனாதிபதி, நிதியமைச்சு, ஸ்ரீ மத்திய வங்கியின் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கையின் நீண்ட விளக்கத்தை நேற்று அமைச்சரவையில் முன்வைத்தார்.
இதனையடுத்து இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் உடன்படிக்கைகளை மேற்கொள்வதற்கு உரிய அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane) தெரிவித்துள்ளார்.
பாரிஸ் கிளப் மற்றும் உரிய தரப்புகளுடன் நாளைய தினம் (26) இலங்கை கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை இரவு நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார் என கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
Comments are closed.