இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார்.
இருப்பினும், இந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு காஷ்மீர் பிரச்சினையும் ஒரு நிபந்தனையாக இருக்கும் என்பதை அவர் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாகாணத்தில் உள்ள காம்ரா விமானப்படை தளத்தில் இராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்களுடன் உரையாடும் போது ஷெபாஸ் இந்தக் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என இந்தியா கூறிவரும் நிலையில் இரு நாடுகளுக்கு இடையிலான எதிர் நடவடிக்கைகள் வலுப்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.