உயர் பெறுமதியான மாணிக்கக்கல் என்று பொய் கூறி, போலியான கல் ஒன்றை விற்பனை செய்ய தயாராகிய இருவர் ஆனமடுவ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (23) இரவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, ஆனமடுவ பரமாகந்த கிராமத்தைச் சேர்ந்த 34 மற்றும் 38 வயதுடைய பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், சந்தேகநபர்கள் இருவரும் ஆனமடுவ நகரிலுள்ள வர்த்தகர் ஒருவருக்கு போலியான மாணிக்கக்கலை ஒரு கோடி ரூபாவிற்கு விற்பனை செய்ய முயற்சித்துள்ளனர்.
இது தொடர்பில் சந்தேகம் ஏற்பட்ட வர்த்தகர் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
ஒரு கோடி ரூபாய்க்கு போலி மாணிக்கக்கல் விற்க முயற்சித்த இருவர் கைது!
மேலும், சந்தேகநபர்கள் ஆனமடுவ நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Comments are closed.