இந்தியாவின் இராணுவ ஊடுருவல்! தயார் நிலையில் பாகிஸ்தான்…

0 0

இந்தியாவின் இராணுவ ஊடுருவல் விரைவில் நிகழும் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் எச்சரித்துள்ளார்.

 சர்வதேச ஊடகம் ஒன்றுடன் வழங்கிய நேர்காணலில் இதனை கூறியுள்ளார்.

இந்தியாவின் இராணுவ ஊடுருவல் “உடனடியான ஒன்று” என்று அவர் விளக்கமளித்துள்ளார்.

இந்த தாக்குதல் உடனடியான ஒன்று என்பதால் நாங்கள் எங்கள் படைகளை பலப்படுத்தியுள்ளோம் எனவும் கூறியுள்ளார்.

எனவே அந்த சூழ்நிலையில் சில மூலோபாய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் எனவும், கவாஜா விளக்கியுள்ளார்.

எனவே பல இராஜதந்திர முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன, என்று கவாஜா சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பிணைப்பு உடைக்க முடியாதது என்றும், அது மக்கள், அரசாங்கங்கள், தலைவர்களுக்கு இடையிலான பிணைப்பு எனவும் அந்நாட்டு தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு காஷ்மீரில் நாம் கண்டது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதுவர் கூறியுள்ளார்.

நான் பார்த்த புகைப்படங்கள் மனதை உடைப்பதாக இருந்தன என்றும் கூறியுள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிராக நாம் மிகவும் உறுதியுடன் போராட வேண்டும் என்றும், பயங்கரவாதிகள் ஏதாவது செய்தால், அவர்கள் அதற்கு விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.